கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்


கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள்

தென்காசி

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்க சுரண்டை கிளை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஹரிஹரசுதன், பொருளாளர் மாரிச்செல்வி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் அரசாணை எண் 56-ஐ பயன்படுத்தி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு எழுத்துத்தேர்வை கைவிட்டு நேர்காணல் முறையை செயல்படுத்த வேண்டும். அதுவரை சட்டக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு இணையாக ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்தில் காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் 38 கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story