ஆட்டோக்கள் மோதல்; பெண் பலி


ஆட்டோக்கள் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:37+05:30)

ஆட்டோக்கள் மோதல்; பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

தென்காசி

கடையநல்லூர் அருகே உள்ள முத்துசாமியாபுரத்தை சேர்ந்த மாடசாமி மனைவி முனியம்மாள் (வயது 32). இவர் தினமும் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பகுதியில் ஒரு எலும்பு மில்லில் வேலைக்கு வருவது வழக்கம். அவ்வாறு இவர் சம்பவத்தன்று ஒரு ஆட்டோவில் வேலைக்கு வந்தார். அப்போது எதிரே வந்த ஒரு ஆட்டோ மீது இவர் வந்த ஆட்டோ மோதியது. இதில் கழுத்தில் பலத்த காயம் அடைந்து முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story