மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
சேலம்
இளம்பிள்ளை:-
சேலம் அல்லிக்குட்ைடயை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 58). இவர் நேற்று முன்தினம் மாலை ஆட்டையாம்பட்டியில் இருந்து காகாபாளையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். மலைபிரியாம்பாளையம் அருகே வந்த போது, எர்ணாபுரம் நம்பியாம்பட்டி பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே வழியாக வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக கவின்குமாரின் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற ஸ்ரீதரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீதர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story