மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வேன் டிரைவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வேன் டிரைவர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வேன் டிரைவர் பலியானார்.

சேலம்

எடப்பாடி:

எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சி வேட்டுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மகன் பிரகாஷ் (வயது25) வேன் டிரைவர். இவர் எடப்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நெசவாளர் காலனி பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவர் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பிரகாசும், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த தம்பா கவுண்டனூரை சேர்ந்த உத்தரசாமி, அவருடைய மகன் கவின் ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் பிரகாஷ் சிறிது நேரத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story