புதுப்பேட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுப்பேட்டை,
நேருக்குநேர் மோதல்
புதுப்பேட்டை அருகே உள்ள சிறுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் லட்சுமணன் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி - சேலம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிப்பாளையம் கேட் அருகில் சென்ற போது, லட்சுமணன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
போலீசார் விசாரணை
இதில், லட்சுமணன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே லட்சுமணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.