திருச்செந்தூர் அருகே காரில் வந்து ஆட்டை திருடி சென்ற மர்ம கும்பல்

திருச்செந்தூர் அருகே காரில் வந்து ஆட்டை  திருடி சென்ற மர்ம கும்பல்
x

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் காரில் வந்து மர்ம கும்பல் ஆடுகளை திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியை வைத்து மர்ம கும்பலை போலீசார் ேதடிவருகின்றனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் காரில் வந்து மர்ம கும்பல் ஆடுகளை திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியை வைத்து மர்ம கும்பலை போலீசார் ேதடிவருகின்றனர்.

ஆடு திருடும் கும்பல்

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக லோடு ஆட்டோ, கார்களில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் தெரு ஓரத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுத்து கிடந்தன. அப்போது, ஒரு சொகுசு கார் ஆடுகள் அருகே நிறுத்தப்பட்டது.

தப்பி ஓட்டம்

அந்த காரிலிருந்து முன் பக்க கதவை திறந்து வேகமாக இறங்கிய மர்ம நபர் ஒருவர் வேகமாக தெரு ஓரத்தில் படுத்துக்கிடந்த ஒரு ஆட்டை பிடித்து காரின் முன்பக்கத்தில் ஏற்றினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் அங்கிருந்து சீறிப்பாய்ந்து சென்றது. காரில் ஆட்டை திருடி செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். ஆனால் காரில் திருடிய ஆட்டுடன் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

கண்காமிப்பு கேமரா காட்சி

இந்த ஆடு திருட்டு சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆடு மற்றும் மாடுகள் இரவு நேரங்களில் திருடப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் எண்ணை வைத்து மர்ம கும்பலை பிடிக்க திருச்செந்தூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story