உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்
x

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் செலுத்துகின்றனர்.

இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 24, 25-ந்தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

காணிக்கை எண்ணும் பணி

மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டன. தொடர்ந்து அவற்றை எண்ணி அளவிடும் பணியை கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story