புதிய கட்டிடம்-பாலங்கள் கட்டும் பணி தொடக்கம்
புதிய கட்டிடம்-பாலங்கள் கட்டும் பணி தொடங்கியது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஜெயங்கொண்டம் நகராட்சி, சிதம்பரம் சாலையில் உள்ள ரேஷன் கடைக்கு ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி, 2-வது வார்டு ஆதிதிராவிடர் காலனி வடக்குத்தெருவில் ரூ.13 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி, குஞ்சிதபாதபுரம் தெருவில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி, வார்டு 21 சோழியன் தெருவில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி ஆகியவற்றை க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதிசிவகுமார், துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி ஆணையர் குமார், பொறியாளர் (பொறுப்பு) ராஜகோபாலன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் பூபதி, கவுன்சிலர்கள் சுந்தராபாய் ராபர்ட், ருக்ஷணா பேகம் இதயதுல்லா, மங்கைபுகழேந்தி, அம்பிகாபதி, சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.