நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி தொடக்கம்


நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி தொடக்கம்
x

வேலூர் கோட்டை அகழிநீரை வெளியேற்ற நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி தொடங்கியது.

வேலூர்

வேலூர் கோட்டை அகழிநீரை வெளியேற்ற நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி தொடங்கியது.

தண்ணீர் புகுந்தது

வேலூர் கோட்டை அழகிய அகழியுடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோட்டையை சுற்றி பார்க்க ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில் வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்து, கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கால் முட்டி அளவு தண்ணீரில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோட்டை அகழி நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் பல நாட்களாக கோவில் வளாகத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. மேலும் வேலூர் மாநகராட்சி பகுதியில் மழையின் போது பல்வேறு இடங்களில் அதிக ப்படியான தண்ணீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே மாநகராட்சி சார்பில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக நீர் மூழ்கி மோட்டார் ரூ.2 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் பொருத்தும் பணி

இந்த மோட்டார் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1¼ லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதனை வேலூர் கோட்டை அகழியில் பொருத்தி சோதனை மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) அகழியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி சோதனை ஓட்ட முறையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வேலூர் கோட்டை அகழியில் தண்ணீரை வெளியேற்றுவதற்காகவும், மழையின் போது நீர் தேங்கும் இடங்களில் இருந்தி உடனடியாக நீரை வெளியேற்றவும் நீர்மூழ்கி மோட்டார் வாங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் வரும் நாட்களில் கோட்டை கோவிலுக்குள் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தண்ணீர் வந்தால் மோட்டார் மூலம் உடனடியாக நீர் அகற்றப்படும் என்றனர்.


Next Story