பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்


பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 27 Jun 2023 2:30 AM IST (Updated: 27 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

திண்டுக்கல்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் காவடி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் முடிகாணிக்கை செலுத்துவதோடு, நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியலில் போடுகின்றனர். இவை நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த 12, 13-ந்தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமை தாங்கினார். முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது. கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் உண்டியல் பொருட்களை எண்ணி அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடைபெறுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story