வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
x

தென்காசியில் வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தென்காசி

தென்காசி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட சாலையில் வாகன போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை- செங்கோட்டை- கொல்லம் மாநில நெடுஞ்சாலையில் தென்காசி ெரயில்வே மேம்பாலம் தொடக்கம் பகுதியில் உள்ள இலஞ்சி விலக்கில் இந்த பணி நடைபெற்று வருகிறது.

இந்த வழியாக நாள் ஒன்றுக்கு எத்தனை வாகனங்கள் சென்று வருகின்றன? என்பது குறித்த கணக்கீடு நடைபெறுகிறது. இதனை நெடுஞ்சாலை துறை தென்காசி கோட்ட பொறியாளர் ராஜசேகர் நேற்று மாலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் உதவி கோட்ட பொறியாளர் சின்னசாமி, உதவி பொறியாளர்கள் முத்துகிருஷ்ணன், பூமிநாதன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பணி வருகிற 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.


Next Story