டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு
வாணியம்பாடி நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி நகராட்சி பகுதியில் கொரோனா, டெங்கு தடுப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதை நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
மேலும் கொரோனா, டெங்கு தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று அம்பூர்பேட்டை பகுதியில் உள்ள வார்டுகளில் உள்ள வீடுகளில் குப்பைகள் பிரித்து வாங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். மேலும் கொரோனா தடுப்பு குறித்து வீடு வீடாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.