சரக்கு ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு
சரக்கு ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு
தஞ்சை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில் நிலையம்
தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். தஞ்சை வழியாகவும், தஞ்சையில் இருந்தும் சென்னை, திருச்செந்தூர், எர்ணாகுளம், கோயம்புத்தூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதே போல் தஞ்சையில் இருந்தும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் சரக்கு ரெயில்கள் தஞ்சைக்கு வந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்கின்றன. இதே போல் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை மூட்டைகளும், உரங்களும் தஞ்சைக்கு வருகின்றன.
என்ஜின் தடம் புரண்டது
இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு ரெயில் நிலையத்தில் உள்ள 7-வது நடைமேடைக்கு சரக்கு ரெயில் என்ஜின் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக என்ஜினின் முன்பக்க ரெயில் சக்கரம் தண்டவளாத்தில் இருந்து தடம் புரண்டது.
இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள், திருச்சியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தஞ்சைக்கு வந்து தடம் புரண்ட சரக்கு ரெயில் என்ஜினை சரி செய்தனர்.
இதனால் ரெயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது.