மேலூர் அருகே பரபரப்பு -மதுகுடித்த பூசாரி மயங்கி விழுந்து சாவு;மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
மது குடித்து மயங்கி விழுந்த பூசாரி பரிதாபமாக இறந்தார். மற்ெறாருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலூர்
மது குடித்து மயங்கி விழுந்த பூசாரி பரிதாபமாக இறந்தார். மற்ெறாருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவில் பூசாரி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவை அடுத்த கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் பனையன் (வயது 45). இவர் பெரிய நாச்சியம்மன் கோவில் பூசாரி ஆவார். அதே ஊரை சேர்ந்தவர் கருத்தமொண்டி(43).
நேற்று மதியம் இவர்கள் இருவரும் கிடாரிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி உள்ளனர். பின்னர் இருவரும் பெரியனாச்சியம்மன் கோவில் அருகே மது அருந்தினார்கள்.
சாவு
மது குடித்த சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பனையன் பரிதாபமாக இறந்தார். கருத்தமொண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த ஒருவர் திடீரென்று இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குபதிவு செய்தார்கள். இதற்கிடையே பலியான நபர், மதுவாங்கிய டாஸ்மாக் கடையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
காரணம் என்ன?
இறந்தவர் சாவுக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதியாக கூற முடியும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.