கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகராட்சியை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜாபர்சாதிக் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் நகராட்சியில் முறைகேடுகள் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ரகுமான், ரசாக், அப்துல்லா, சிவகுமார், காசி, ரங்கன், கேசவன், ஜோதி உள்பட பலர் பேசினார்கள். முடிவில் ரவி, நன்றி கூறினார்.


Related Tags :
Next Story