கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

வந்தவாசியில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம ்நடைபெற்றது.

திருவண்ணாமலை

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

அப்போது சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சரவணன், சுகுமாரன், சிவக்குமார், வீரபத்திரன், யாசர்அராபத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story