கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட நிர்வாக குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நார்த்தாம்பூண்டி கிராமத்தில் அண்ணா நகர் பகுதியில் 50 ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த இடம் நீர்பிடிப்பு பகுதி என வருவாய்த்துறையினர் தவறுதலாக கணக்கில் ஏற்றி விட்டதால் தற்போது மலைவாழ் மக்கள் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
மேலும் இவர்களுக்கு மாற்றுயிடம் வழங்கியுள்ளது. அந்த இடம் மிகவும் ஆபத்துள்ள இடமாகும். எனவே தற்போது இருக்கும் இடத்தில் உள்ள எந்த வீடுகளையும் இடிக்க கூடாது என்று கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ஜெகன் வெங்கடாசலம், சரவணன் உள்பட கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.