இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டியனை சென்னையில் கொலை செய்யும் நோக்கில் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரவி, மண்டல செயலாளர்கள் செல்வராஜ், சசிகுமார், செந்தில்குமார், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



Next Story