இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து மக்கள் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். தரைக்கடை வியாபாரிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தொடர்ந்து தரைக்கடைகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சிவா, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் பார்வதி, மாணவர் மன்ற மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீரங்கம் பகுதி பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story