இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
கந்திலி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 14-வது மாநாடு கந்திலி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாநாட்டிற்கு டி.பெருமாள், டி.பரிமளா ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட துணைச் செயலாளர் நந்தி முன்னிலை வகித்தார் ஒன்றியச் செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சி சாமிகண்ணு கலந்து கொண்டு பேசினார்,
மாநாட்டில் தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல கால்வாய்கள் அமைக்க வேண்டும். கந்திலி மருத்துவமனையை முழுநேர மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும், கந்திலியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுந்தரேசன், முல்லை கே.பி.மணி, ஒன்றிய செயலாளர் தேவராஜ், ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.