இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்

பேராவூரணி:

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கருகும் குறுவை நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீர் திறந்து விடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேராவூரணி ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா (பேராவூரணி), எஸ்தர் ஜெயலீமா (சேதுபாவாசத்திரம்) ஆகியோர் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்டக் குழு உறுப்பினர் வீரமணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஒரத்தநாடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒரத்தநாடு தபால் நிலையம் எதிரே நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.. இந்தப் போராட்டத்திற்கு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் வாசு இளையராஜா, திருவோணம் ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், விவசாய சங்க தேசியக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story