இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, தொண்டமாந்துறை கிராமத்தில் மோகன்ராஜ் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யாமல் காலம் கடத்துவதாக போலீசாரை கண்டித்து பேசினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story