இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர

மயிலாடுதுறை

மத்திய அரசை கண்டித்து சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நீதிசோழன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். உயிர்காக்கும் மருந்து பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. உயர்வை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். மின்சார வாரியத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கக்கூடாது. வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் தேவகி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் வித்யாதேவி, ஜெயக்குமார் உள்பட அனைவரையும் சீர்காழி போலீசார் கைது செய்தனர்.






Next Story