இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர்
ராமநத்தம்
திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமசாமி, குப்புசாமி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலைக்கான நேரம் 9 மணியாக திருத்தி அமைக்கவும், சட்டக்கூலி ரூ.281 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் நிதிஉலகநாதன், முருகையன், துணை செயலாளர் தேவா, வட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் செல்வராசு, தலைவர் காசிநாதன், ஒன்றிய பொருளாளர் அம்பிகா உள்பட விவசாய தொழிலாளர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story