இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பந்தலூர்,
ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், தொழிலாளர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வேண்டும், அரசு ஊழியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பந்தலூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு வட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்கள்டேன்டீ குடியிருப்புகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, தற்போதைய குடியிருப்புகளை மாற்றி புதிதாக வீடு வழங்க வேண்டும். டேன்டீ தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் சொந்தமான வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தினர்.