இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கீரனூர் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கீரனூர் அருகே மேல்கரைப்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னச்சாமி, கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாட்கள் பணி வழங்க வேண்டும். தொப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வடமாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ேகாஷமிட்டனர். இதில் மாவட்ட தலைவர் ஜெகன், செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பழனி தாலுகா அலுவலகத்துக்கு சென்று பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி மனு கொடுத்தனர்.