இந்திய கம்யூனிஸ்டு கட்சியி ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 1:34 AM IST (Updated: 22 Jun 2023 5:00 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

பாபநாசம் பழைய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு) கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கண்ணையன், நகர கமிட்டி பொறுப்பாளர் கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் பிரபு, பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லதுரை மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாபநாசம் வருவாய் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் நில அளவை தொடர்பான மனுக்கள் மீது நில அளவைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story