கோவில்பட்டியில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவில்பட்டி தாலுகாவில் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை போன்றவற்றை உடனடியாக வழங்கக்கோரியும், நிலுவையில் உள்ள மனுக்களை பரிசீலனை செய்து உதவித்தொகைகள் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகா துணைச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், தாலுகா குழு உறுப்பினர்கள் இன்னாசி முத்து, அகிலா, நகர துணைச் செயலாளர் முனியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் லெனின் குமார், மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகர குழு உறுப்பினர்கள் செல்லையா, ராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் துணை தாசில்தார் சங்கர நாராயணனிடம் மனு கொடுத்தனர்.


Next Story