கோவில்பட்டி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்கினிபத் திட்டத்தை கைவிடக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாடத்தில் மாவட்டச் செயலாளர் கருப்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், பாரதி கண்ணம்மா, பொன்னுச்சாமி, ராமகிருஷ்ணன், பாலமுருகன், நகரச் செயலாளர் சரோஜா, கிளை செயலாளர்கள் சுரேஷ்குமார், ஸ்ரீரங்கநாதன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் மகேந்திரசிங் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story