இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடைபயண பிரசாரம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடைபயண பிரசாரம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும், மக்களையும் பாதுகாப்போம் குறித்த நடைபயண பிரசார இயக்கம் பாக்குடி, சத்தியமங்கலம், சித்தன்னவாசல் உள்பட அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் நடந்தது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் பிரசார பயணம் குறித்து துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வினியோகம் செய்து தொடங்கி வைத்தார். இதில் கட்சி கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும், மக்களையும் பாதுகாப்போம், மாற்றத்தை நோக்கி நாடு தழுவிய நடைபயண பிரசார இயக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் ரெத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினர் நீலா தலைமையில், நடைபயண பிரசாரத்தை ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.