மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்


மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
x

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர்.

சிவகங்கை

இளையான்குடி,

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர்.

மின் கட்டண உயர்வு

இளையான்குடி துணை மின் நிலையத்தில் மின்வாரிய உதவி இயக்குனரிடம் பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்தவும், மின் கட்டண உயர்வை சீர் செய்யவும், மக்கள் மீது சுமை ஏற்படுத்தாத வண்ணம் மின்கட்டணம் திருத்தி அமைக்க வேண்டும் என்றும், மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி

இதே போல மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக கல்லல், திருப்பத்தூர் தாலுகா குழு சார்பாக கல்லல் மின்வாரிய அலுவலகத்தில் 143 மனுவும், கண்டரமாணிக்கத்தில் 328 மனுவும், திருப்பத்தூரில் 80 மனுவும் என மொத்தம் 551 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், தாலுகா செயலாளர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் பீர்முகமது, சக்திவேல், பாலு, பாக்கியலட்சுமி, பழனிகுமார், அமானுல்லா, சக்திவேல், விநாயகமூர்த்தி, தமிழரசன், மாணிக்கம், சுபாலட்சுமி, மதி, சேவகபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story