தமிழ்நாடு கவர்னரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கவர்னரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு கவர்னரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

போடிப்பட்டி,

உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சௌந்திரராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ரணதேவ், மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட நிர்வாகி கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.ஆர்ப்பாட்டத்தின் போது கார்ல்மார்க்சின் விஞ்ஞான சோஷலிச சித்தாந்தத்தையும், கம்யூனிசத்தையும் இழிவுபடுத்தி பேசி வரும் கவர்னரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story