செங்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


செங்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செங்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

செங்கோட்டை:

இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஆழ்வார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் வேல்மயில் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட கவுரவ தலைவர் ஏ.சாமி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சுப்பிரமணியன், தாலுகா உதவி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டக்குழு உறுப்பினர் பால்ராஜ், மாதர் சங்க நிர்வாகி ஆயிஷா பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story