பறவைகள் கணக்கெடுப்பில் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கலாம்


பறவைகள் கணக்கெடுப்பில் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கலாம் என வனச்சரகர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வனச்சரகர் மு.பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி, ஆறு உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் மற்றும் காப்புக்காடு பகுதிகளிலும் மார்ச் 4 மற்றும் 5-ந் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

எனவே சமுக ஆர்வலர்கள் வனத்துறை அலுவலர்களுடன் சேர்ந்து பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெறலாம்.மேலும் இதுகுறித்து விவரங்களை தெரிந்து கொள்ள வனத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Next Story