செய்துங்கநல்லூரில்சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
செய்துங்கநல்லூரில்சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுலைமான் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் தாஹா, மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் ஆகியோர் பேசினர். செய்துங்கநல்லூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும். திருச்செந்தூர் - பாலக்காடு ெரயிலை செய்துங்கநல்லூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிளை செயலாளர் கனி நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் அஸாருதீன், துணை தலைவர் நவாஸ், பொருளாளர் ரஷீத், துணை செயலாளர்கள் பரீத், தவுலத்துத்தாஹ், இம்ரான் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.