250 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
மாதனூரில் 250 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில் 250 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வேட்டி, சேலைகளை மற்றும் வளைகாப்பு பொருட்கள் வழங்கி வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) ஸ்டெல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story