300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
x

300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஜோலார்பேட்டை வட்டார அளவிலான 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் சி.கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், மத்திய ஒன்றிய செயலாளர் உமா கண்ரங்கம், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார். மேலும் 5 வகையான உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. தேவராஜி பேசும்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலவச பஸ் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் கர்ப்பிணிகள் கருத்தரித்த காலம் முதல் ஆரோக்கியமான குழந்தை பெற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் சத்துமாவு, முட்டை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story