360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
x

திருப்பத்தூரில் 360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

திருப்பத்தூர்

சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 360 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறார். தேர்தலின் போது அறிவித்த குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும். அதேபோல, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா, மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதாவெங்கடேஷ், ஒன்றியக் குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ. குணசேகரன், ஒன்றிய செயலாளர் முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் தீபா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story