கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
புள்ளம்பாடி வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா புள்ளம்பாடியில் நடைபெற்றது. விழாவுக்கு சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புள்ளம்பாடி ஒன்றியக்குழுதலைவர் ரசியாகோல்டன்ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் ஆலீஸ்செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஆலம்பாக்கம், ஆலம்பாடி மேட்டூர், விரகாலூர், திண்ணகுளம், வெங்கடாசலபுரம், புதூர்பாளையம், கோவாண்டகுறிச்சி, இ.வெள்ளனூர், பு.சங்கேந்தி, ந.சங்கேந்தி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 50 பயனாளிகள் கலந்து கொண்டனர். விழாவில் கர்ப்பிணிகளுக்கு பழங்கள் அடங்கிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வளையல்கள் அணிவிக்கப்பட்டன. மேலும் பலவகையான சாதம் வழங்கப்பட்டது. முடிவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரகதீஷ்வரி நன்றி கூறினார். அதேபோல் கல்லக்குடியில் டால்மியா மக்கள் மன்றத்தில் டால்மியா மகளிர் மன்றம் புள்ளம்பாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.கல்லக்குடி வடுகர்பேட்டை, முதுவத்தூர், கல்லகம், மால்வாய், மேலரசூர், சரடமங்கலம், சாத்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.