சமுதாய வளர்ச்சி 100 சதவீதம் முழுமையாகும்
பொது சுகாதாரத்துறை மூலம் சமுதாய வளர்ச்சி 100 சதவீதம் முழுமையாகும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.
பொது சுகாதாரத்துறை மூலம் சமுதாய வளர்ச்சி 100 சதவீதம் முழுமையாகும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.
நூற்றாண்டு விழா
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை கலெக்டர் மேகநாதரெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி தொடர் ஜோதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஜோதி ஊர்வலமாக அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:-
கடந்த 200 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் கண்ட முன்னேற்றம் மிக முக்கியமானதாகும். ஒரு சமுதாயம் வளர்ச்சியில் தொடர்ச்சியாக நிற்க வேண்டும் என்றால் பொது சுகாதாரமே அடிப்படையாகும். நாம் விவசாயம், விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்த போதிலும் ஆரோக்கியம், சுகாதாரம், பொது சுகாதாரத்துறை இருந்தால் தான் சமுதாய வளர்ச்சி 100 சதவீதம் முழுமையாகும்.
சிறந்த பணிக்கான பரிசு
பொது சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் சேவைகளும் மிகவும் பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் மனோன் மணி, டாக்டர் கலு சிவலிங்கம் மற்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார். மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 200 பணியாளர்களுக்கும் கலெக்டர் பரிசுகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சுகாதார துறை துணை இயக்குனர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.