சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்
விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை தாங்கினார். புள்ளியியல் ஆய்வாளர் சிவக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சமூகநீதி, மனித உரிமைகள், வன்கொடுமை தடுப்பு, போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணையவழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக்கூட்டத்தில் கல்லூரி துறைத்தலைவர்கள், உதவி பேராசியர்கள் மற்றும் கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், ஆங்கிலத்துறையின் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.