சமூக அணி திரட்டல் பிரசார ஊர்வலம்
சமூக அணி திரட்டல் பிரசார ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல்
வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சமூக அணிதிரட்டல் பிரசார ஊர்வலம் நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நல்லமனார்கோட்டை ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இந்திராணி வரவேற்றார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார மேலாளர் வெண்ணிலா கலந்துகொண்டு மகளிர் சுயஉதவிக்குழுவில் இணைவதால் ஏற்படும் பொருளாதார மேம்பாடுகள், வளர்ச்சி குறித்து விளக்கி பேசினார். நல்லமனார்கோட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்து நிறைவடைந்தது. இதில் மகளிர் சுயஉதவி குழுவினர் திரளாக பங்கேற்றனர்.
Related Tags :
Next Story