சாலையில் தேங்கிய மழைநீரால் பயணிகள் அவதி


சாலையில் தேங்கிய மழைநீரால் பயணிகள் அவதி
x

சாலையில் தேங்கிய மழைநீரால் பயணிகள் அவதிபட்டு வருகின்றனர். தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள சாலையின் சிமெண்டு பெயர்ந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் கொசுக்கள், கிருமிகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார்சைக்கிள்களில் வருவோர் மழைநீரால் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story