ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் அவதி


ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் அவதி
x

சோளிங்கர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகள் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து பயணிகள் அமர்வதற்காக வைக்கப்பட்டிருந்த இருக்கைகளை அகற்றிவிட்டு வைத்துள்ளனர். இதனால் பயணிகள் அமர்வதற்கு கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். முறையாக குப்பைகளை அகற்றுவது இல்லை. இரவு நேரங்களில் பாலூட்டும் தாய்மார்கள் அறை குடிமக்களின் கூடாரமாக மாறி உள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் அடிக்கடி பயணிகளின் செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதால், இங்கு மின்விளக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பயணிகளுக்கு பயன்படும் வகையில் அடிப்படை வசதி முழுமையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story