நிறுவன மேலாளர் வீட்டில் திருட்டு


நிறுவன மேலாளர் வீட்டில் திருட்டு
x

நெல்லையில் நிறுவன மேலாளர் வீட்டில் திருட்டு

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் 19-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் செந்தில்ராஜ் (வயது 44). இவர் கேரள மாநிலம் கொச்சியில் தார் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். காந்திமதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சகோதரியின் மகன் சிவசங்கரன் என்பவர் செந்தில்ராஜ் வீட்டில் தினந்தோறும் காலை 10 மணிக்கு சென்று இரவு 7 மணி வரை போட்டி திறனாய்வு தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று காலை சென்றபோது வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு வீடு திறந்து இருந்தது. பின்னர் பார்த்தபோது வீட்டிலிருந்த டி.வி., லேப்-டாப், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பூட்டிய வீட்டில் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story