பிடிவாரண்டு எதிரொலி:3 வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1.96 லட்சம் இழப்பீடு


பிடிவாரண்டு எதிரொலி:3 வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1.96 லட்சம் இழப்பீடு
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த 2-ந் தேதி, 25 வழக்குகளில் தீர்ப்புப்படி இழப்பீடு வழங்காத 33 நபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக 3 வழக்குகளில் உடனடியாக இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிடைத்துள்ளது.

நாமக்கல் அருகே உள்ள ஒட்டக்குளம் புதூரில் வசித்து வரும் விஜயகுமார் விபத்தில் சேதமான அவரது காருக்கு பழுது நீக்க ஏற்பட்ட செலவு தொகையை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி தரவில்லை என்று நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அவரது காருக்கு பழுது நீக்க ஏற்பட்ட செலவு ரூ.54 ஆயிரத்து 997 மற்றும் சேவை குறைபாட்டிற்காக இழப்பீடு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

அந்த தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்ததால், கடந்த 2-ந் தேதி இன்சூரன்ஸ் நிறுவன மேலாளருக்கு ஜாமீனில் வர இயலாத வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 997-ஐ காசோலை மூலமாக வழங்கி விட்டதாக கூறி வழக்கை வாபஸ் பெற விஜயகுமார் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். மேலும் ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.25 ஆயிரத்து 800-ம், மற்றொரு வழக்கில் ரூ.15 ஆயிரத்து 235-ம் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story