அறிவியல் வினாடி-வினா போட்டிகள்


அறிவியல் வினாடி-வினா போட்டிகள்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:30 AM IST (Updated: 21 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

அறிவியல் வினாடி-வினா போட்டிகள் நடந்தன.

திருவாரூர்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மன்னார்குடி ஒன்றிய அளவிலான துளிர் வினாடி- வினா போட்டி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். துளிர் வினாடி-வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பொன்முடி வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியை தேவி வாழ்த்தி பேசினார். இளநிலை பிரிவில் நெடுவாக்கோட்டை ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம், புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 2-ம் இடம் பிடித்தனர். உயர்நிலைப்பிரிவில் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம், தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2-ம் இடம் பிடித்தனர். மேல்நிலை பிரிவில் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம், பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடம் பிடித்தனர். இவர்கள் வருகிற 29-ந் தேதி திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனபால் பரிசு வழங்கினார். முடிவில் அறிவியல் இயக்க செயலாளர் இமானுவேல் நன்றி கூறினார்.


Next Story