கல்லூரி மாணவர்களுக்கு போட்டி
திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி நடந்தது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் 2-ம் ஆண்டு இளவேனில் 2023 அனைத்துத்துறை மாணவர்களுக்கு இடையிலான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது. விழாவையொட்டி 21 துறை சார்ந்த 325 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டி, போட்டுக்கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். அதில் அதிக புள்ளிகளை பெற்று சமூக பணித்துறை மாணவர்கள் சுழற்கோப்பையை வென்றனர். போட்டியை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் செயலர் தாமரை வரவேற்றார். நிகழ்ச்சியை தமிழ் துறை தலைவர் பரிமளா தொகுத்து வழங்கினார்.விழாவிற்கு கல்லூரிசெயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கி பல்திறன் போட்டியில் வெற்றி பெற்ற சமூக பணித்துறை மாணவர்களுக்கு சுழற்கோப்பையை வழங்கி பாராட்டினார். மாணவர் இணை செயலர் காவியா நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறை மாணவர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பேராசிரியர் நா.ரஞ்சித் குமார் செய்து இருந்தார்.