மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான போட்டியில் விழுப்புரம் மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை


மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான போட்டியில்  விழுப்புரம் மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான போட்டியில் விழுப்புரம் மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

விழுப்புரம்

தமிழக அளவில் நடைபெற்ற 3-வது மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சுபஸ்ரீ கலந்துகொண்டு 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றிப்பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவரை மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.

அப்போது பள்ளியின் தலைமையாசிரியர் புஷ்பராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் அல்போன்ஸ், சோபியா, ஆரோக்கியநாதன், ஆரோக்கியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story