பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்


பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்
x

வள்ளலாரின் முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது.

விருதுநகர்


வள்ளலாரின் முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது.

முப்பெரும் விழா

வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு மதுரை இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் ஜூலை 2-ந் தேதி வள்ளலாரின் முப்பெரும் விழா அருப்புக்கோட்டை சொக்கநாதர் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. ்இதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகள் விருதுநகர் கே.வி.எஸ். வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் வருகிற 20-ந் தேதி அன்று காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு பரிசு

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஜூலை 2-ந் தேதி நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story